போங்கபா என் பொணத்தை தாண்டி போங்க ஜோதிமணி சவால் !

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக+ தொடங்கிய கையெழுத்து இயக்கம் சார்பாக கரூரில் அரவக்குறிச்சி திமுக எம் எல் ஏ, ஜோதிமணி எம் பி ஆகியோர் இணைந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ரஜினி குறித்தும் பாஜக குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

Loading...

ரஜினி ஒரு கந்துவட்டி காரர் எனவும் அவர் பாஜகவின் ஊதுகுழல் எனவும், இது அவரை தவிர அனைவருக்கும் தெரியும் எனவும் அவரை பற்றிய அரசியல் நிலைப்பாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் விமர்சனம் செய்தார், அதன் பிறகு நாங்கள் இருக்கும் வரை தமிழகத்தில் குடிமக்கள் பதிவேட்டினை நடத்த விடமாட்டோம் என்றும், அப்படி நடந்தால் என் பிணத்தில் மீதுதான் நடக்கும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

இதற்கிடையில் தனது கருத்திற்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் ஜோதிமணி, இதற்கு முன்னர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் போது அவரை ஜோதிமணி விமர்சிக்காத வார்த்தைகளே இல்லை இப்போது அவர் தயவில் வெற்றிபெற்றுவிட்டு அவருக்கு விசுவாசமாக இருப்பது போல் நாளை எப்படி வேண்டுமானாலும் மாறுவார்.

Loading...

அவர் ரஜினியை விமர்சனம் செய்ய தகுதியில்லை மேலும் மண் எடுத்து கரூர் மாவட்டத்தையே சிந்திக்கிறார்கள் என கூறிய ஜோதிமணி, செந்தில்பாலாஜி உடன் சென்று மண் எடுக்க அனுமதி கேட்டவர் என்றும், இங்கு வீர வசனம் பேசவா ஜோதிமணியை எம் பி ஆக்கினார்கள் நாடாளுமன்றம் சென்றால் கொறட்டை விட்டு தூங்கவேண்டியது, ஆனால் தமிழகம் வந்தால் தலைகீழாக மக்களை ஏமாற்றுவது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*