Connect with us

#24 Exclusive

கமல் மற்றும் ஷங்கருக்கு சம்மன்: கைது செய்ய வாய்ப்பா?

நேற்று முன்தினம் இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் போலீசார் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்பட படக்குழுவினர் பலரிடம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்

இதனை அடுத்து கமல் மற்றும் ஷங்கருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்தவுடன் அவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

Loading...

இந்த விபத்து கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவரின் கவனக்குறைவால் நடந்தது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் தலைமறைவாக இருக்கும் அவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

மேலும் இதுவொரு குற்றச்செயல் இல்லை என்றும், அஜாக்கிரதை காரணமாக நடந்த விபத்து என்பதால் இந்த வழக்கை பொருத்தவரை கைது நடவடிக்கை இருக்க வாய்ப்பு இல்லை என்றே போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.,

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending