Connect with us

#24 Exclusive

ஒரு வண்டியை திருடி தந்தால் 500 ரூபாய் காவல் துறை தரும் !திருடனின் வாக்குமூலம் வீடியோ .

சேலம் நகரில் ஓரு இருசக்கர வாகனத்தை திருட முட்பட்டபோது ஒரு திருடன் கையும் களவுமாக சிக்கினான் அவனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விசாரித்தபோது பல உண்மைகள் வெளியானது

அதில் காவல் துறையினர் தான் இருசக்கர வாகனங்களை திருட சொல்வதாகவும் ஒரு வாகனத்தை திருடி காவல் துறையில் ஒப்படைத்தால் 500 ரூபாய் தருவார்கள் என்றும் அந்த திருடன் கூறினான் மேலும் சில காவல் துறையினரின் பெயர்களையும் அவர்களின் காவல் நிலையத்தையும் குறிப்பிட்டு அவன் கூறினான்

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் கொடுமையை பாருங்கள் நண்பர்களே…. அருமையான காவல் துறை????????????

Posted by Samuga Tamilan – சமூக தமிழன் on Monday, December 2, 2019

தான் கடந்த ஒருவருடமாக இதை செய்வதாகவும் ஒரு வாகனத்தை கொடுத்தால் 500 ரூபாய் தருவார்கள் என்றும் மேலும் ஒருநாளைக்கு 5 வாகனங்களை கொண்டுவருமாறு காவல்துறையினர் கூறுவதாகவும் அவன் சொன்னான் மேலும் தான் வாகனத்தை கொடுத்ததும் தனக்கு பணம் கொடுத்து தன்னை மதுரைக்கு பேருந்தில் ஏற்றி விடுவார்கள் என்று கூறிய அவன் தனக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு வண்டியின் உரிமையாளர் வந்து புகார்செய்தாள் அவரிடம் 5000 ரூபாய் பெற்றுக்கொண்டு வண்டியை ஒப்படைத்து விடுவார்கள் என்று கூறி அதிர்ச்சியளித்தான் அந்த திருடன் .

Loading...

மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய காவல் துறையே ஆள் வைத்து திருடுவது கொடுமையின் உச்சம் , காவல் துறையில் பல நல்ல அதிகாரிகள் இருந்தாலும் இதுபோன்ற சிலரால் ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கும் தலைதலைகுனிவு என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Loading...

(சில ஆண்டுகள் முன்பு வந்த செய்தியின் மீள் பதிவு இது ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்க படாத காரணத்தால் மீண்டும் இந்த செய்தி பரவலாக வலம்வந்த வண்ணம் உள்ளது )

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending