Connect with us

#24 Exclusive

நெல்லை அருகே வயதான தம்பதியரை தாக்‍கி, கொள்ளையடித்த வழக்‍கில், 2 மாதங்களுக்‍குப் பிறகு கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை அருகே வயதான தம்பதியரை தாக்‍கி, கொள்ளையடித்த வழக்‍கில், 2 மாதங்களுக்‍குப் பிறகு கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்‍கு முன்பாக, கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியை மிரட்டி, 2 பேர் கொள்ளையடிக்‍க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் துணிச்சலுடன் போராடி, கொள்ளையர்களை விரட்டியடித்தனர். செந்தாமரை அணிந்திருந்த 35 கிராம் நகையுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பின்னர் துப்பு துலங்கியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் பெருமாள் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு அரிவாள், ஒரு துப்பாக்‍கி மற்றும் கொள்ளை போன நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக, மாவட்டக்‍ காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்தார்.

Loading...

Trending