இது லிஸ்டிலேயே இல்லையே சீனா பாகிஸ்தானிற்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் எதற்காக தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிவற்றில் எப்போதும் இந்தியாவிற்கு எதிராகத்தான் போராட்டம் நடைபெறுமே தவிர இதுவரை பாகிஸ்தானை கண்டித்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது இல்லை, இந்த நிலையில் தற்போது சீனா மற்றும் பாகிஸ்தானை கண்டித்து ஒரு சேர போராட்டங்கள் நடைபெற்றது இரு நாடுகளுக்கும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

Loading...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜீலம் நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 2.4 பில்லியன் டாலர் செலவாகும்.

இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முசாபராபாத் நகரில், பல இடங்களில் போராட்டம் நடந்தது மிகப்பெரிய பேரணியும் நடந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாகிஸ்தான் சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த அணை கட்டுமானத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

Loading...

சர்ச்சைக்குரிய பகுதியில், எந்த சட்டத்தின் அடிப்படையில் அணை கட்டுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தானும்,சீனாவும் ஐ.நா., விதிகளை மீறியுள்ளன. அணை கட்டுமானத்தை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

இந்த போராட்டத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இலங்கை, நேபாளம், வங்கதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதுபோல் இந்தியா பாகிஸ்தானிலும் அரசியல் குழப்பம் செய்ய முயல்வதாகவும் சர்வதேச அரங்கில் பிரச்னையை கொண்டு செல்ல இருப்பதாகவும் பாகிஸ்தான் கதறிவருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3911 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*