பிரதமருக்கு அறிவுரை சொன்ன வைரமுத்துவிற்கு பாஜகவினர் கொடுத்த அதிர்ச்சி பரிசு !!! கவிஞர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே?

TNNEWS24 :இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய சீனா எல்லைக்கு சென்று அங்கு இருக்கும் நிலையை ஆராய்ந்து, இந்திய இராணுவத்தினரை உற்சாகப்படுத்தினார், மேலும் இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார் அப்போது பேசிய அவர்

Loading...

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு (குறள் எண்: 766)

Loading...

என திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார், இது தமிழர்கள் இடையே பிரபலமடைந்த சூழலில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரை பாராட்டுவது போல் வஞ்சக புகழ்ச்சி செய்திருந்தார், அதில் படைவீரர்களுக்கான உரையில்படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து
திருக்குறளை மேற்கோள் காட்டிய
பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.
‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’
என்ற இன்னொரு குறளையும்
அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம். என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது பசி பட்டினி தீர பகை இருக்க கூடாது என சீனாவுடன் நிரந்தர பகை ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் மறைமுகமாக வைரமுத்து அவ்வாறு குறிப்பிட்டு எழுதியிருந்தார், இவ்வாறு பிரதமரின் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்க முயன்ற வைரமுத்துவிற்கு நெற்றியில் பச்சை குத்துவது போன்று பாஜகவினர் செய்த செயல் கவிஞரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணையவழி பாஜகவினர் கவிஞர் வைரமுத்துவிற்கு அவர் பாணியிலேயே திருக்குறளை மேற்கோள்காட்டி கருத்து கூறியுள்ளனர் பிரதமருக்கு நன்றி தெரிவித்த வைரமுத்துக்கு நன்றி தெரிவித்து… “பிறன்மனைநோக்காதபேராண்மை சா ன்றோா்க்கு அறனொன்றோஆன்ற_வொழுக்கு.”

என்ற குறளை உங்கள் நெற்றியில் பச்சை குத்தி வைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் வைரமுத்து பெண்கள் குறித்த மீடூ புகாரில் சிக்கி அவருக்கு கொடுக்க இறந்த டாக்டர் பட்ட பரிசளிப்பு விழா ரத்து செய்யபட்டதும், பல படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது, ஒருவர் மற்றவருக்கு அறிவுரை சொல்லும் முன்பு தன்னை பற்றி முதலில் சிந்திக்க வேண்டும் என வைரமுத்துவிற்கு சிலர் அறிவுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*