Connect with us

அரசியல்

மீண்டும் மூலபத்திரம் குறித்த அடுக்கடுக்கான நான்கு சந்தேங்களை எழுப்பிய ராமதாஸ் ! ஈரேழு லோகத்தில் இப்படி ஒரு கம்பெனியை பார்த்தது இல்லை என கிண்டல் !

முரசொலி கட்டிடம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சுமத்தியிருந்தார், அதனை தொடர்ந்து பாஜக மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் டெல்லியில் சென்று நேரடியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகனை சந்தித்து முரசொலி நிலம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று தெரிவித்தார், அவருடன் பாஜகவின் தடா பெரியசாமியும் இணைந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு கொடுத்தார்.

இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலி நிலம் குறித்து ஆதாரத்தை வெளியிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் அரசியலில் இருந்து விலக தயாரா என கேட்டிருந்தார். புகார் கொடுத்ததன் எதிரொலியாக சென்னையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விசாரணை நடந்தது அப்போது திமுக சார்பில் ஆஜரான ஆர் எஸ் பாரதி முரசொலி நிலம் குறித்து மூலபத்திரம் அனைத்தும் இருப்பதாகவும் திமுக மீது வீண் பலி சுமத்திய ராமதாஸ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் 27.01.2020 அன்று டெல்லியில் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் திமுக முழு பல்டி அடித்தது, அதாவது முரசொலி நிலமே தங்களுக்கு சொந்தமானது இல்லை எனவும் தாங்கள் அதில் வாடகைக்கு இருப்பதாக ஆணையத்திடம் விளக்கம் அளித்தது இந்தசூழலில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி 4 கேள்விகளை எழுப்பியுள்ளார் அதில்,

Loading...

1)முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே…. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா

Loading...

2)அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?

3)முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

4)அகில இந்தியாவில் மட்டுமல்ல…. ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி…. நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது! இவ்வாறு அவர் கேள்வியுடன் சேர்ந்து கிண்டலும் அடித்துள்ளார்.

தற்போது பலரும் மூலபத்திரத்தை விடுங்கள் வாடகை ரசீதை கொடுங்கள் என கேள்வி எழுப்புகின்றனர், முரசொலி மூலபத்திரம் விவகாரத்தில் கடுமையாக பாமகவை விமர்சனம் செய்த தருமபுரி எம் பி செந்திலை அரசியலில் இருந்து விலகுவாரா என ராமதாஸ் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending