Connect with us

அரசியல்

பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது !

Published

on

பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது

ராஞ்சி: நூறுநாள் ஆட்சி வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை என்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அரசு சமீபத்தில் தனது நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி இன்று (12/09/19) மூன்று முக்கிய தேசிய அளவி லான திட்டங் களைத் தொடங்கி வைத்தார்.

Loading...

வேளாண் விவசா யிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான 462 உறைவிடப் பள்ளிகள்(நவோதயா ), சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் மீன்வளத்தைப்  பெருக்கும் பன்னோக்கு தேசிய முனையத் திட்டம், ராஞ்சியில் k புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் அங்கு புதியதலைமைச் செயலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் திட்டம் உள்ளிட்டவைகளைத் துவங்கி வைத்த பிறகு, ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:

மத்திய அரசின் முதல் நூறுநாள் ஆட்சி என்பது வெறும் ட்ரைலர்தான்; முழுப்படம் இன்னும் வரவில்லை என்று ரஜினியின் பன்ச் டயலாக்கை பேசினார் . தாங்கள் சட்டத்தை விட உயர்வானவர்கள் என்று கருதியவர்கள் தற்போது பிணை கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார்கள் என்று சிதம்பரத்தை சாடிய மோடி . நான் என்ன உறுதியளித்தேனோ அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  செயல்படக்கூடிய திறமை வாய்ந்த ஒரு அரசை உங்களுக்கு அளிப்பதாக நான் உறுதி அளித்திருந்தேன்

இந்த 100 நாட்களில் முத்தலாக் தடைச்சசட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதன் காரணமாக இஸ்லாமியப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் சரியாக பெற்றிருக்கிறார்கள்.  தீவிரவாத எதிர்ப்புச் சட்டமானது கடுமையாக வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் சுதந்திரத்திற்கு பிறகு துவங்கப்பட்டுள்ளது . பொது மக்களுக்குத் தவறிழைத்தவர்கள் தகுந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு நாங்கள் தேர்தலுக்கு முன்பு என்ன உறுதியளித்தோமோ அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடைசியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற பருவகால கூட்டத் தொடரானது இந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முக்கியமான மசோதாக்கள் இந்தத் தொடரில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.

மோடி ரஜினி டயலாக் குறித்து பேசியதால் மோடிதான் ரஜினியை இயக்குகிறார் என்று இப்போது தெளிவாகியிருப்பதாக சீமான் போன்றவர்கள் சொல்லவாய்ப்பு இருப்பதாகவும் அதையும் தமிழக ஊடகங்கள் விவாதம் நடத்துமே என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com