பிரதமர் மோடியின் ட்விட்டரில் இருந்து முதல் ட்வீட் செய்த தமிழகத்தை சேர்ந்த பெண் யார் தெரியுமா?

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூகவலைத்தள கணக்கை 7 சாதனை பெண்கள் நிர்ப்பகிப்பார்கள் என்று கடந்த வாரம் தெரிவித்து இருந்தார், அதன் படி இந்தியாவை சேர்ந்த 7 பெண்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களின் சாதனைகளை உலகறிய செய்து வருகிறார் மோடி.

Loading...

அந்த வகையில் இன்று பிரதமர் மோடி ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து முதல் ட்வீட் செய்த பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், “FoodBank India” என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக்கூறினார்.

இவர் கடந்த 2015- ம் ஆண்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்க திட்டமிட்டு அதன் படி அன்று தொடங்கிய தன் சேவையை தொடர்ந்து பல்வேறு நபர்களின் உதவியுடன் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார், இவரை பிரதமர் மோடி முதல் சாதனை பெண்ணாக சர்வதேச மகளிர் தினத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

Loading...

பிரதமர் மோடியின் ட்விட்டரில் கணக்கில் கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கு ஸ்னேகா பதிலளித்து வருகிறார், மேலும் இன்றைய தினத்தில் பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக சினேகா தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஸ்னேகா அவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது, தமிழகத்தை சேர்ந்த பெண்ணை தேர்ந்து எடுத்து பிரதமர் மோடி அவரின் சாதனையை ஊக்குவித்திருப்பது சக தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற சாதனை பெண்கள் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் மாலையில் 7 வது பெண்மணியாக ட்வீட் செய்ய இருப்பவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது, அவர் விரைவில் அரசியலுக்கு வரக்கூடிய பெண்ணாக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து பிரதமர் தமிழ் மொழி குறித்தும் தமிழர்கள் குறித்தும் பல கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் அங்கீகரித்து பேசி வருவது மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உண்டாக்கிய திமுக போன்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*