இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று அரசு தொலைக்காட்சியில் உரை என்ன அது?

கொரோனா பெரும் தொற்றால் உலகம் முடங்கி இருக்கும் சூழலில் இந்தியா தற்போது உச்சகட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது, மேலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அது ஒரு புறம் இருக்க இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Loading...

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சி மூலம் உரைநிகழ்த்த உள்ளார், கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் சில தளர்வுகள் நிவாரண உதவிகள் குறித்து பிரதமர் பேசலாம் என எதிர்பார்க்க படுகிறது, அதே நேரத்தில் கடந்த மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் இந்திய எல்லையில் சீனா அத்துமீறல்கள் குறித்து கண்ணுக்கு கண் இந்தியா எதிரிகளை பழி வாங்கும் என்று பேசியிருந்தார்.

இந்த சூழல்தான் பிரதமர் உரை மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது அத்துடன் இன்று மூன்றாவது முறையாக லடாக்கில் இந்தியா சீனா இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது, நேற்று இந்தியா சீனாவின் 59 ஆப்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று பிரதமரின் பேச்சும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

மேலும் கூடுதல் செய்தி :-

அடுத்த மாதம் ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா வரவுள்ளது..

இஸ்ரேல் விரைவில் வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்க உள்ளது..

M 777 க்கு தேவையான பீரங்கி குண்டுகளை விரைவில் இந்தியாவிற்கு அமெரிக்கா தரவுள்ளது..

ரசியாவிடம் இருந்து ATGM, வெடி மருந்துகள் மற்றும் சில ரகசிய ஆயுதங்கள் விரைவில் இந்தியா வரவுள்ளது மற்றும் ஏற்கனவே வந்துள்ளது.( இந்தியதேசிய இராணுவ செய்திகள் )

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*