Connect with us

#24 Exclusive

அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து

Published

on

அயோத்தி வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் சற்றுமுன் வழங்கியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அங்கு கோவில் கட்டலாம் என்றும், அதேபோல் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தை மத்திய, மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது என்றும், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன் என்று கூறிய பிரதமர் மோடி, எந்த ஒரு பிரச்சனைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Loading...

அதேபோல் இந்த தீர்ப்பு குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியபோது, ‘வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு’ என்றும் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.

Loading...

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending