முதல் அடியும் முடிவும் நாம் எழுதுவோம் பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடம் என்ன பேசினார்? சீனா கடும் அதிர்ச்சி

பிரதமர் மோடி எப்போது என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்கும் அவரது நெருங்கிய குழுவினருக்கு மட்டுமே தெரியும், அனைத்தும் முடிந்த பிறகே செய்திகள் வெளிவரும் அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி யாரும் எதிர்பாராத விதமாக தற்போது இந்திய சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த பகுதியில் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Loading...

எப்போதும் அடுத்தவர்கள் கூறும் தகவல்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது பிரதமர் மோடியின் வழக்கம் இந்த நிலையில் இந்திய. எல்லையில் சீனா ராணுவ வீரர்களின் நிலையை அறிய நேரடியாக களத்திற்கு சென்ற மோடி அங்கு முன் வரிசையில் போரில் இருக்கும் வீரர்களுடனும், சீனா வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்தவர்களுடனும் அவர்கள் மனநிலையை கேட்டு அறிந்தார்.

அதில் பல வீரர்கள் முதல் அடியும் சீனாவின் முடிவும் நமது கையில் இருக்கும் என்றும் யுத்த களத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பிரதமரிடம் தெரிவித்துள்ளனர், அதற்கு பிரதமர் விரைவில் நடக்கும் என்று தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Loading...

பிரதமர் மோடி நேரடியாக யுத்த களத்திற்கு சென்று இருப்பது ராணுவ வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதுடன், சீனாவிற்கு வலுவான செய்தியை இந்தியா தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது, பிரதமர் மோடி எப்போது என்ன முடிவு எடுப்பார் என்ற நிலையில் அடுத்து இந்திய சீனா எல்லையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறப்படுகிறது.

சுதந்திர வரலாற்றில் போர் பதற்றம் சூழ்ந்த நிலையில் அப்பகுதிக்கு பிரதமர் ஒருவர் நேரடியாக சென்று ஆய்வு செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லையில் பிரதமரின் திடீர் பயணம் சீனாவிற்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*