மோடி அணிந்திருந்த தொப்பி எந்த படையுடையது தெரியுமா? ஏன் அதனை பிரதமர் இன்று அணிந்திருந்தார்?

மோடி அணிந்திருந்த தொப்பி எந்த படையுடையது தெரியுமா? ஏன் அதனை பிரதமர் இன்று அணிந்திருந்தார்?

Loading...

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே 15 ந்தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக் சென்றுள்ளார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார். 

Loading...

சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
முன்னதாக, விமானப்படைத் தலைவரும், ராணுவத் தலைவரும் லே விமான நிலையத்தை அடைந்தனர். கால்வனில் நடந்த வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கிறது.

சீனாவுக்கு எதிரான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை பின்னடைவு செய்யும் விதமாக சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி இராணுவ வீரர்களுக்கு மத்தியில் பேசுகையில் கோழைகளின் முயற்ச்சியை நீங்கள் முறியடித்துள்ளீர்கள் எனவும் கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்றும் அதில் எப்போதும் இந்தியா பின்வாங்க போவதில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி எப்போதும் தான் அணிந்து செல்லும் ஆடைகளின் மூலம் குறிப்பை உணர்த்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார்.

அது போல் இன்று லடாக் சென்ற மோடி அணிந்திருந்த தொப்பி விவாதத்தை கிளப்பியிருக்கிறது, இன்று பிரதமர் மோடி fire and fury corps இந்திய இராணுவ பிரிவிற்கு சொந்தமான தொப்பியை அணிந்து சென்றிருந்தார், இந்த அமைப்பு தற்போது லடாக் எல்லையை பாதுகாத்து வருகிறது, இந்நிலையில் இந்தியா முதன் முதலாக அணு ஆயுத சோதனை செய்த போது அப்போதைய ஜனாதிபதி அப்துல் காலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இதே தொப்பியை அணித்திருந்தாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனாவிற்கு குறிப்பால் உணர்த்தியதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*