Connect with us

#24 Exclusive

டெல்லியின் அனைத்து சாலைகளும் அடைப்பு பிரதமர் மோடி அவசர அழைப்பு இரவில் அரங்கேறிய 3 சம்பவங்கள் !

தலைநகர் டெல்லி வரலாறு காணாத பாதிப்பை அடைந்துள்ளது, நாட்டின் தலைநகர் இப்படி ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் என எந்த இந்தியர்களும் நினைத்திருக்க மாட்டார்கள், தமிழகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர்களே உடனடியாக கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவு நிலைமை மோசமாகியுள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு மற்றும் இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றினால் பிரதமர் மோடியால் டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்த தகவலை நேரடியாக கவனம் செலுத்த முடியவில்லை எனவும் உள்துறைஅமைச்சர் அமிட்ஷா கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கைள் குறித்து கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுஇரவு முதல் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின, கடந்த 24 மணி நேரத்தில் 3 வது முறையாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா உள்துறை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார், கடைசியாக நடந்த சந்திப்பு மூன்று மணிநேரம் வரை நீடித்தது.

Loading...

அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லி காவல்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் அதன் பின்பு டெல்லியின் எல்லைகள் முழுவதும் துணை இராணுவ படையினர் சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது கலவரக்காரர்கள் தப்பிக்காத வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்க பட்டிருக்கலாம் எனவும் வெளியில் இருந்து உள்ளேயாட்கள் வராமல் தடுக்க இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Loading...

இவை அனைத்தையும் விட முக்கிய அழைப்பாக பிரதமர் மோடி கேபினட் மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார், இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவ பெயரை உண்டாக்க திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி ஆவேசமடைந்ததுடன் இதற்கான பலன் கிடைக்கும் என பொருள்படும் பேசியதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending