பிரதமர் குடியரசுத்தலைவரை சந்தித்தது ஏன்? வெளியான முக்கிய தகவல் !!!

பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஜூலை 5) பகல் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Loading...

ஜூலை 3 ஆம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்குச் சென்று சீனாவுடனான எல்லைச் சண்டையில் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். ராணுவ வீரர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இந்தநிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையின் நிலை பற்றியும், நாட்டில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும் விளக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குடியரசு தலைவர், பிரதமர் இருவரும் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது, இதற்கிடையில் இந்தியா சீனா இடையே நிலவி வரும் பல்வேறு மாற்றங்கள் குறித்து வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்தியா சார்பில் போருக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் முன்னேற்பாடாக இந்தியா செய்துவிட்டது, மேலும் உலக அரங்கில் தனக்கு சாதகமாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை ஒன்று திரட்டிவிட்டது இந்நிலையில்தான் நேற்று உலகம் உற்று நோக்கும் மற்றொரு செயலை இந்தியா அதிரடியாக நிகழ்த்தியுள்ளது.

சீனாவின் எதிரி நாடுகளான பூடான் மற்றும் மியான்மர் நாடுகளின் தலைவர்களிடம் பேசி சீனா எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாகவும் சர்வதேச சமூகம் உதவவேண்டும் என்ற கோரிக்கையே வைக்க சொல்லிவிட்டது.
இனி பூடான் நாடுகளில் இருந்தும் எளிதில் சீனாவை தாக்கலாம் இது சீனாவிற்கு மரண பயத்தை உண்டாக்கியுள்ளது.

இன்று இதுகுறித்துதான் பிரதமர் மோடி குடியரசு தலைவரை சந்தித்து பேசியிருக்ககூடும், முப்படைகளின் பொறுப்பு குடியரசுத்தலைவரிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, 1962- ம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட தோல்வியை இந்தியா இந்த முறை கட்சிதமாக முறியடிக்கும் என்றும் புது சாதனையை இந்தியா படைக்கும் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*