இனி பினராயி விஜயன் UAE சென்றால் என்ன தண்டனை ? UAE தூதரகம் வெளியிட்ட தகவலால் காற்றில் பறந்த மானம் !!

தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தை கடத்திய வழக்கில் பினராயி விஜயன் பதவிக்கு சிக்கல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது, UAE நாட்டில் இருந்து 30 கிலோ தங்கம் கடத்தி வந்ததை விமானம் நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Loading...

விசாரணையில் தங்கம் கடத்தல் பின்னணியில் மோசடி பெண்மணி ஸ்வப்னா இருந்தது தெரியவந்தது, ஸ்வப்னா பினராயி விஜயனின் முதன்மை செயலளராக இருந்த சிவசங்கரன் கீழ் பணியாற்றியது தெரியவந்தது, இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, பினராயி விஜயனுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள்

இறங்கினர்.

Loading...

இந்த சூழலில் பினராயி விஜயனுக்கு இனி UAE செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்திருப்பது, அந்நாட்டு தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த நாட்டு துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: துாதரகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இது குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளியில் வரும். இது தூதரகத்திற்கு ஏற்பட்ட மிக பெரிய களங்கம் என்றும் தொடர்புடையவர்கள் சர்வதேச சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய புலனாய்வு பிரிவும், தங்க கடத்தல் குறித்த விசாரணையை துவக்கியுள்ளதால், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன் மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு UAE அரசாங்கம் பல நூறு கோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு கொடுக்க இருப்பதாக போலி செய்தியை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கி அதன் பிறகு ஓடி ஒழிந்தவர் பினராயி விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*