இஸ்லாமியர்களின் செயலை கண்டித்து களத்தில் இறங்கிய பெரியாரிஸ்ட் காவல்துறை இனியாவது கடுமையான நடவடிக்கை எடுக்குமா?

ஒட்டு மொத்த இந்தியாவும் கொரோனவை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் வேலையில் காவல்துறை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் மசூதி அமைப்பாளர்கள் கடும் சேதத்தை விளைவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

காவலர்களை தாக்குவது, சுகாதாரப்பணியாளர்களை அடிப்பது, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுப்பது என பல்வேறு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் இவர்களின் செயலின் மூலம் கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக மாறியுள்ளது.

நிலைமை இப்படி இருக்க இன்றும் பல பகுதிகளில் ஒன்றாக அருகில் இருந்து கூட்டு பிராத்தனை செய்கின்றனர், மத்திய அரசு வழிபாட்டு தளங்களில் கூடகூடாது என அறிவுறுத்தியும் அவர்கள் செய்யும் நடவடிக்கைகளால் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிர் பலியாகும் சம்பவங்கள் உண்டாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading...

இதனை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் நாத்திகரான அருள்மொழியும் கண்டித்துள்ளார், இது குறித்து அவர் கூறியதாவது : பொது இடத்தில் நிறையபேர் கூடுவதால் கொரானா கிருமித் தொற்று எளிதில் பரவும் என்று திரும்பத்திரும்ப ஒலிக்கும் எச்சரிக்கையை புறக்கணித்து கூட்டம் கூடினால் தவறுதான் .

https://m.facebook.com/story.php?story_fbid=2599473260331220&id=100008057130935

பொழுது போக்காக பைக்கில் செல்பவர்கள், மற்றும் கடற்கரையில் கூடுபவர்களுக்கும்
தொழுவதற்காக பள்ளிவாசலில் அல்லது பொதுவெளியில் கூடுபவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

மத அடையாளத்துடன் கூட்டம் சேரும்போது தொற்றுநோய் பரவும் ஆபத்தை தாண்டி அது திட்டமிட்டு வன்மத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குத்தான் தீனி போடும் என்ற பொறுப்புணர்ச்சி அவ்வாறு கூடச்செய்யும் இசுலாமிய அமைப்புகளுக்கு உடனடியாக உணர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அனைவரும் ஒரு தரப்பினருக்கு எதிரான நிலையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இணையாவது அவர்கள் திருந்துவார்களா இல்லை கூட்டமாக தொழுகை நடத்தி கொரோனாவை பரப்புவர்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*