சபாஷ்… சூப்பர் திட்டம்! திருப்பூரில் அறிமுகமாகியுள்ள கிருமி நாசினி சுரங்கம் !

சபாஷ்… சூப்பர் திட்டம்! திருப்பூரில் அறிமுகமாகியுள்ள கிருமி நாசினி சுரங்கம் !

Loading...

திருப்பூரில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பாதுகாப்பாக வெளியூர்களுக்கு செல்ல ஏதுவாக கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

தமிழகத்தில் நேற்று முன் தினம் வரையில் 67 பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருவர் பலியாகி இருந்தார்.. நான்கு பேர் குணமாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில் நேற்று இரவு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதிப் படுத்தப்பட்டது தமிழகத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் பாதுகாப்பாக வெளியே செல்லும் பொருட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து கிருமிநாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளது. மக்கள் வெளியே செல்லும் போது இந்த சுரங்கத்தைக் கடந்து சென்றால் அவர்களிடம் உள்ள கிருமிகள் அழிந்துவிடும் என்றும் ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பிரச்சனைகளும் ஏற்படாதது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*