தமிழக மக்களே இதை செய்யுங்கள் வேண்டுகோள் விடுத்த OPS !

தமிழக மக்களே இதை செய்யுங்கள் வேண்டுகோள் விடுத்த  OPS !

தமிழக மக்களே இதை செய்யுங்கள் வேண்டுகோள் விடுத்த OPS !

சேமிப்பையும், சிக்கனத்தையும் வலியுறுத்தி தமிழகத்தில் 30-10-2019 அன்று உலக சிக்கன நாள் விழா கொண்டாடுவது அறிந்து என் மனமார்ந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்து, சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

Loading...

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”
என மனித வாழ்க்கையில் பொருளின் முக்கியத்துவத்தை ஈரடிகளில் திருவள்ளுவர் அழகாக விளக்கியுள்ளார்.மக்கள் தங்களது கடின உழைப்பின் மூலமாக ஈட்டிய செல்வத்தின் ஒரு சிறு பகுதியை, தங்களது சேமிப்புத் தொகையினை, பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், வாழ்க்கையின் இன்றியமையாத தருணங்களில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை பாதுகாப்பாகத் திரும்பப் பெற்று பயன்படுத்த முடியும்.

Loading...

தங்களால் இயன்ற அளவு, தங்களது வருமானத்திற்குள்ளேயே, குடும்பத்தினை திறம்பட நடத்திச் செல்வதற்கு மக்கள் முயற்சி செய்வது ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகோலும். தங்களின் எதிர்காலத் தேவைகளில் முக்கியமாகக் கருதப்படும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியச் செலவினங்களை தங்கள் சேமிப்பிலிருந்தே மேற்கொள்ள இயலும். எனவே, பாதுகாப்பான முறையில் சேமிக்க அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, பொருளாதார வளர்ச்சி பெற்று சிறந்த முறையில் பயனடையுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அஞ்சலகங்களில் சிறு சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையில், அம்மா அவர்களது அரசு, ஏராளமான மகளிர் முகவர்களை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணியமர்த்தியுள்ளது. எனவே, தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சிறுசேமிப்புத் திட்டங்களில் இன்றே முதலீடு செய்து, பயன் பல பெற்றிட இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *