அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

Loading...

தமிழகத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாகவும், குணமானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் இன்றோடு 65 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றோடு நான்காவது ஊரடங்கு முடிய இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Loading...

மேலும் ஊரடங்கின் தளர்வாக ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளோடு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பேருந்துகளில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. இதனால் தனியார் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் எங்காவது கூட்டமாக செல்ல விரும்பினால் அதற்காக அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரளவுக்கு வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*