அத்தியாவசிய தேவையா? பாஸ்வாங்கிக் கொள்ளுங்கள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

அத்தியாவசிய தேவையா? பாஸ்வாங்கிக் கொள்ளுங்கள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

Loading...

ஊரடங்கை முன்னிட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு பாஸ் வாங்கிக் கொண்டு வெளியே செல்லலாம் என சென்னை மாநகராட்சி  அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரொனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பு கம்மியாக உள்ளதே ஒரே ஆறுதல்.

Loading...

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு தமிழகத்தில் காவல்துறையினர் கடுமையாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லலாம் என அறிவித்துள்ள போதும் காவல்துறையினர் மக்களை அடிப்பதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் உரிய ஆவணங்களைக் கொடுத்து விட்டு பாஸ்பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல சென்னை மாநகராட்சிக்குள் அத்தியாவசிய தேவைகளுக்காக வர விரும்புவர்கள் எண் 75300 01100ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*