Connect with us

#24 Exclusive

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக நடுவீதியில் சமையல் செய்து மக்கள் நூதன போராட்டம்.

ஆந்திரா:மறைந்த ஆந்திரா காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதல்வருமான Y.S ராஜசேகர ரெட்டியின் மகனும் YSR காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முதல்வரும் மான YSR.ஜெகன்மோகன்க்கு எதிராக மக்கள் நடு வீதியில் சமையல் செய்து நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் YS ராஜசேகர ரெட்டிமறைவுக்கு பின் காங்கிரஸ் கட்சி ஜெகன்மோகனை கட்சியில் இருந்து ஓரம் கட்டி பிறகு சிறையில் அடைத்தது.அதற்கு பிறகு YSR காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கிய ஜெகன்மோகன் நடந்து முடிந்த சட்டமன்றதேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார்.அவர் பதவி ஏற்ற பிறகு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தருவதை போல் காட்டிக்கொண்டாலும் முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் அரசியல் பலி வாங்கும் நோக்குடன் செயல்படுவதை மட்டுமே அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார் என அரசியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆந்திராவின் தலைநகரான அமராவதியை உலகின் முக்கியதத்துவம் வாய்ந்த இடமாக மாற்றுவேன்.இதனால் ஆந்திரா வளர்ச்சி பெரும்.அமராவதியை சுற்றியுள்ள மக்களும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவர் என கூறி ஓட்டு கேட்டார்.

Loading...

ஐக்கிய ஆந்திராவாக இருந்த போது ஆந்திராவின் தலைநகராக ஐதராபாத் இருந்தது.ஆனால் அம்மாநிலம் தெலுங்கானா,ஆக என இரண்டாகப்பிளவுபட்ட போது ஐதராபாத் தெலுங்கானா தலைநகராக மாறியது.அதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆந்திரா அரசுக்கு ஏற்பட்டது.இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சந்திர பாபு நாயுடு உட்பட அனைத்து தரப்பினரும் ஆந்திராவின் தலைநகராக அமராவதி அமைவதை விரும்பினர்.தற்போது வரை ஆந்திராவின் தலைநகராக அமராவதி மட்டுமே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திரா சட்டமன்ற கூட்டத்தொடர் தலைநகர் அமராவதியில் நடந்து வருகிறது.கூட்டத்தொடர் விவாதத்தில் தலைநகர் அமராவதி பற்றியும் விவாதம் வந்தது.அப்போது பேசிய ஜெகன்மோகன்:மாநில பிரிவினையால் தற்போது கடும் நிதி தட்டுப்பாடு நிலவுகிறது.அமராவதியை தலைநகராக்கும் பணி தற்போது தான் முன்னெடுக்கபட்டு வருகிறது.இதை சட்ட சபைத் தலைநகராக்கிக் கொண்டு துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதித்துறைகளுக்கான தலைநகரமாகவும் வைத்துக்கொள்ளலாம் .3 தலைநகரங்கள் உருவாக்குவது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு எடுக்கும்.’ என கூறினார்.

இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மாநில பிரிவினையால் ஏற்கனவே நிதி பற்றாக்குறை இருக்கும் நிலையில் தேவையில்லாமல் 3 தலைநகரங்கள் எதற்கு ?என மக்களும்,அரசியல் விமர்சகர்களும்,எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.இவரின் இந்த பேச்சை வைத்து எதிர் கட்சிகள் இவரை சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெகன்மோகனின் இந்த கருத்தால் அதிர்ச்சியும்,அதிருப்தியும் அடைந்துள்ள அமராவதி நகரை சுற்றியுள்ள சுமார் 29 கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஜெகன்மோகனை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தர்ணா,சாலைமறியல்,மற்றும் நடுவீதியில் சமையல் செய்வது என பல வழிகளில் போராட்டம் நடத்தி ஜெகன்மோகனுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜெகன் மோகன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை ஆதரித்தார். பின்னர் அவர் முதலமைச்சர் ஆன பிறகு, அமராவதியை முக்கியத்துவம் அல்லாத சட்டசபை தலைநகராக்கிக் கொள்ள விரும்புகிறார். ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும்போது தேவையில்லாமல் அரசு பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து 3 தலைநகரை உருவாக்கும் இவரின் இந்த திட்டத்தை முட்டாள் கூட ஆதரிக்கமாட்டான். இது வருத்தமளிக்கிறது. தலைநகருக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடியின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல உள்ளோம்’ என்று ஜெகன்மோகனுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Loading...

Trending