Connect with us

#24 Exclusive

நானும் அரசியலுக்கு வருவேன்: பிரபல இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவது கடந்த சில ஆண்டுகளாக சர்வசாதாரணமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது தமிழகத்தில்தான் அதிகம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல் உள்பட ஒருசில நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் பல நடிகர்கள் பிற கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் ரஜினிகாந்த் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய், விஷால் உள்பட ஒருசிலர் எந்த நேரமும் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனும் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார். இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ’நான் அரசியலுக்கு வருவேன் என்றும் சினிமாவில் சாதித்த உடன் அரசியலுக்கு வருவேன் என்றும் ,அவர் கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வரும்போது புரட்சியுடன் தான் வருவேன் என்றும் நான் அரசியலுக்கு வருவது எப்போது என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Loading...

மேலும் நான் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு அரசு போதிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். ரஜினி கமலை அடுத்து அரசியலுக்கு வரவுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Loading...
Loading...

Trending