ஆயுத பூஜை அன்று சீமானுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ! உள்ளே இருந்த பொருள்களை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் கொந்தளிப்பு !

ஆயுத பூஜை அன்று சீமானுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ! உள்ளே இருந்த பொருள்களை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் கொந்தளிப்பு !

Loading...

சமுகவலைத்தளம்.,

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாட்டம் களைகட்டியது, உழைப்பாளி வர்க்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் தொழிலுக்கு உதவிய வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடவுளுக்கு இணையாக வைத்து மாலை அலங்காரம், பூ பொட்டு வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Loading...

வழக்கம் போல் இந்த முறையும் இந்துக்கள் பண்டிகை என்பதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் வாழ்த்து கூட தெரிவிக்காமல் ஒதுங்கி கொண்டதாக சமூகவலைத்தளங்களில் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் இராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆயுத பூஜையை நினைவூட்டும் விதமாக பார்சல் ஒன்றிணை அனுப்பியுள்ளனர்.

அதில் ஆமை, அரிசி கப்பல் உள்ளிட்டவற்றின் அட்டைப்படத்தை வைத்து அனுப்பியதுடன் பற்களுடன் கூடிய ‘வாய்’ அட்டைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். மேலும் கடிதத்தில் உழைப்பாளர்கள் அனைவரும் தாங்கள் வளர உதவிய ஆயுதங்களுக்கு பூஜை போடுவது நமது ஆயுத பூஜையின் சிறப்பு, அந்த வகையில் நடந்து சென்ற நீங்கள் விலைமதிப்புடைய சொகுசு காரில் வலம் வருவதற்கு உதவியது நீங்கள் சொன்ன கதைகளே அதற்கு உதவியாக இருந்தது உங்கள் “வாய்” எனவேதான் ஆயுதபூஜை அன்று உங்களுக்கு இந்த பொருள்களை பார்சல் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை சிங்காரவேலன் எனும் நபர் கொரியர் அனுப்பிய ரசீதுடன் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் அவரது பதிவிற்கு கீழே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*