அடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் ! செலவுகள் எத்தனை கோடி தெரியுமா? அதில் அந்த முழு கோழி இருக்கே !

அடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் ! செலவுகள் எத்தனை கோடி தெரியுமா? அதில் அந்த முழு கோழி இருக்கே !

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட பங்காரு அடிகளார் இல்ல திருமணவிழா கடந்த வாரம் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு படு விமர்சையாக நடைபெற்றது , பங்காரு அடிகளாரின் பேத்தி மதுமலர் – பிரசன்ன வெங்கடேஷ் திருமணம் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தில் நடைபெற்றது.
விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலினில் தொடங்கி நடிகர் பிரபு வரை 300 கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், திரை உலகினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவை நடந்துமுடிந்த சூழலில் தற்போது பங்காரு அடிகளார் வீட்டு திருமண விழா மிக பெரிய விமர்சனத்தை ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் பெற்றுள்ளது, மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையில் தங்களை எளிமையான முறையில் வளர்த்துக்கொண்ட பங்காரு அடிகளார் என படும் கோவிந்தனின் குடும்பத்தினர், ஒரு திருமண விழாவை மன்னர் வீட்டு திருமண விழா கோலத்தில் நடத்தி இருக்கின்றனர்.

Loading...

இவை அனைத்திற்கும் ஆனா செலவுகள் மட்டும் 50 கோடியை தாண்டும் என்கிறார் பிரபல திருமண ஏற்பாட்டாளர் வளர்மிகி நாதன், அத்துடன் திருமண விழாவில் ஹிந்து மத அடையாளங்களை தவிர்த்து கிறிஸ்துவ முறைப்படி அலங்காரம், பொட்டு

Loading...

வைத்திராமல், மற்றும் பல்வேறு சடங்குகளை பின்பற்றி இருப்பது, மேல்மருவத்தூர் வந்து செல்லும் பக்தர்கள் இடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெய்வ நம்பிக்கை கொண்டவர் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்று பலர் முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த நாட்டில் சிலர் பக்தியினால் கிடைக்கும் பணத்தினை என்ன செய்வது என்று தெரியாமல் இதுபோன்ற ஆடம்பர விழாக்களில் அள்ளி இறைப்பதும், அதனை மற்றவர்கள் அனுபவிப்பதுமாக இருப்பதாக குற்றம் சுமத்துகிறார் இந்து சன்மார்க்க ஆய்வாளர் குன்னக்குடி சுவாமிநாதன் பிள்ளை.

இவரது திருமணத்திற்கு ஆகும் செலவில் 1000 ஏழை பெண்களுக்கு திருமணத்தை நடத்தி முடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, அனைவரும் தங்கள் விருப்பப்படி திருமணத்தை சிறப்பாக கொண்டாட இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ஏழை மக்கள் செலுத்தும் காணிக்கையில் தங்களை வளர்த்து கொண்டவர்கள் இது போன்று ஆடம்பர செயலில் ஈடுபடுவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.

நமது சிறப்பு செய்தியாளர்.

இதற்கு முன்னர் மேல்மருவத்தூர் அம்மனை மேரியாக மாற்றி சர்ச்சையை உண்டாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *