Connect with us

#24 Exclusive

சிக்கினார் பனிமலர் மண்டைமேல இருக்கிற கொண்டையை மறந்துட்டாரே ! அப்போ மஃபோய் சொன்னது உண்மைதானா?

சென்னை :- நாளுக்கு நாள் திமுகவிற்கு ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது, திமுகவின் முக்கியத்தலைவர் பொன்முடி மதன் ரவிச்சந்திரன் அழைத்த விவாதத்தில் கலந்துகொண்டு திமுக திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் எதற்கு கைது செய்யப்பட்டார் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணற அதனை தொடர்ந்து மதன் விசாரணை கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பு உருவானது புதிய பிரச்சனை.

திமுகவினரும் இதுவரை உரிய ஆதாரங்களை கொடுக்காமல் திமுக தலைவராக இருந்த ஸ்டாலினின் தந்தை எழுதிய நெஞ்சுக்கு நீதி எனும் புத்தகத்தை ஆதாரமாக காட்டுகிறார்கள், மேலும் அமெரிக்காவில் ஆதாரம் இருக்கிறது என சொல்லி வந்தார்கள் இந்நிலையில்தான், பிரபல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து தற்போது திமுக செய்தி நிறுவனத்தில் பணியாற்றிவரும் பனிமலர் நேற்று தனது முகநூல் பக்கத்தில்.,

மிசா காலத்தில் ஸ்டாலின் சிறை சென்றதை நினைவு கூர்ந்து உதயநிதி பிறந்த செய்தியை அறிந்து எழுதிய கடிதத்தை பகிர்ந்து இருந்தார், இந்த நிலையில்தான் அந்த கடிதம் குறித்தும் அதில் உள்ள கையெழுத்து, மற்றும் இடம் குறித்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

முதலாவதாக கடிதத்தில் மத்திய சிறைச்சாலை சென்னை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் 1996- ம் ஆண்டுதான் மெட்ராஸ் என்ற பெயரில் இருந்து சென்னை என்ற பெயர் உருவாகியுள்ளது அப்படி இருக்க 19 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி கருணாநிதி சென்னை என கடிதத்தில் குறிப்பிட்டிருக்க முடியும் என்று பலரும் இப்போது பணிமலரை கேள்விகளால் துளைத்து வருகின்றனர்.

Loading...

தொடர்ந்து அனைத்து ஆதாரங்களும் எடுபடாத பட்சத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் எதற்காக கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் பாண்டியராஜன் சொன்னதுதான் உண்மையோ என்று பலரும் இப்போது கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளர்னர். கடைசியில் மண்டைமேல உள்ள கொண்டையை மறந்துடீங்களே பாஸ் !

©TNNEWS24

Loading...

Trending