Connect with us

#24 Exclusive

கவர்ச்சியில் இறங்கிய பத்திரிகையாளர் பனிமலர் வைரலாகும் புகைப்படம் ! யாருக்காக இப்படி?

சென்னை :- தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது கட்சி சேனல் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் பாத்திடிக்கையாளர் பனிமலர், இவருடன் பணியாற்றிய சக செய்திவாசிப்பாளர் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார், அவரை போன்றே பணிமலருக்கும் திரைப்படங்களில் நாயகியாக வலம்வர வேண்டும் என்பது ஆசையாம்.,

இந்த சூழலில் சினிமா வாய்ப்பினை பெறுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தார், பல்வேறு சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்களை பற்றி விமர்சனம் செய்துவந்தார், நடிகர் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்றும் கூறப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை, தீவிர பெரியார் ஆதாரவாளர் என்பதால் இவரை திரைப்படங்களில் அறிமுகம் செய்தால் படம் ஓடுமா ஓடாதா? என்ற கலக்கத்தில் தயாரிப்பாளர்கள் தட்டி கழித்து வந்ததாக கூறப்பட்டுகிறது.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் அதிகமாக வேலைகள் இல்லாத காரணத்தால் மீதமான நேரங்களில் பனிமலர் போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு விதவிதமான புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் அப்லோட் செய்து வருகிறார், வழக்கமாக புகைப்படங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை சேலையில் கவர்ச்சிக்காட்டும் ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோ சூட் போன்று சேலை விளம்பரத்திற்காக கடற்கரையில் தானும் போட்டோ சூட்டில் இறங்கியுள்ளார்.

Loading...

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன, இவர் இதற்கு முன்னர் பெரியார் இப்போது உயிரோடு இருந்தால் அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பதும், metoo புகாரின் போது பிரபல பத்திரிகையின் நிர்வாகத்தில் பணியாற்றியவர் மீது குற்றம் சுமத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த கிருஷ்ணா என்பவர் பெரியாருக்கு தூதா என கிண்டல் செய்து பதிவிட்டிருக்கிறார்

Loading...

©TNNEWS24

Loading...

Trending