பாண்டே வாக்கு பலித்தது வேறுஇடத்திற்கு தாவிய சுபவீ !

பாண்டே வாக்கு பலித்தது வேறுஇடத்திற்கு தாவிய சுபவீ !

Loading...

கொரோனா பரவுதல் வேகம் உலகம் முழுவதும் பல உயிர்களை பழிவாங்கி வரும் சூழலில் ஆங்காங்கே உள்ளூர் அரசியல் வாதிகளின் செயல்களும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன, அதில் தற்போது சிக்கி சிதைந்து ஒருவீட்டு சோற்றினை இழந்து நிற்பவர் சுப.வீரபாண்டியன்.

சமூக வலைத்தளங்களில் வயதிற்கு மீறிய செயல்பாட்டினால், தனது சாதி துவேஷ பேச்சு ஆகியவற்றால் ஓசி சோறு என அழைக்கப்பட்ட சுப.வீரபாண்டியன் எழுதிய கட்டுரை ஒன்று இப்போது அவரை திமுகவின் நிகழ்வுகளில் இருந்து வெளியே வீசும் வகையில் அமைந்துவிட்டது.

Loading...

தினத்தந்தி நாளிதழில் வெளியான கார்ட்டூன் ஒன்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை கேலிசெய்யும் விதமாக இருப்பதாக கூறி கடும் கண்டனத்தை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்தனர், இதனையடுத்து அந்த கார்ட்டூன் குறித்து வருத்தம் தெரிவிப்பதாக தினத்தந்தி நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் அதற்கு முன்னர் படம் வரைந்தவர் ஒரு பிராமணர் என்றும் படம் வரைந்த பார்ப்பன பாம்பு என்ற தலைப்பில் சுபவீ கட்டுரை ஒன்று எழுதி இருந்தார், அதில் மன்னிப்பு கேள் இல்லை என்றால் காலம் உன்னை செருப்பால் அடிக்கும் எனவும் கூறியிருந்தார், மேலும் நாய் எனவும் கடுமையான விமர்சனங்களை எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் சுபவீ பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

சாணக்யா நிறுவனர் பாண்டே தனது கருத்தை பதிவு செய்தார் அதில் சுபவீ போன்றவர்கள் தங்கள் மரியாதையை இழந்து வருவதாகவும் படம் வரைந்தவர் பிராமணர் இல்லை எந்த சாதி குறித்தும் அவதூறாக பேசக்கூடாத நிலையில் பிராமணர் குறித்து பேசுவது மட்டும் திராவிடம் கற்று கொடுத்ததா, நாய் காலம் உன்னை செருப்பால் அடிக்கும் என்று பேசியிருக்கிறீர்கள், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு ஆலோசனை தெரிவிக்கிறேன்.

சுபவீ, வீரமணி போன்றவர்களை அடக்கி வையுங்கள், இல்லை என்றால் வரும் தேர்தலில் அதன் முடிவுகளை கண்கூடாக பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார் பாண்டே அவர் சொன்னது தற்போதய உண்மையாகியுள்ளது, திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தரப்பு திமுகவிற்கு ஆதரவாக இருந்தே திமுகவிற்கு பாதகம் உண்டாக்கும் நபர்கள் குறித்த பட்டியலை அனுப்பியுள்ளது.

அதில் சுபவீரபாண்டியன், பிரசன்னா, தருமபுரி செந்தில் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, இவர்கள் கிறுக்கு தனமாக தங்களை முன்னிலை படுத்துவதற்காக பேசும் பேச்சுக்கள் இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாகிவருவதாகவும் இதே நிலையில் சென்றால் 2021 ம் ஆண்டு தேர்தலில் ஒரு அலை இந்துக்களுக்கு ஆதரவாக வீசினால் அதில் அடித்து செல்லப்படுவது திமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.

முடிந்த அளவு ஊடக விவாதங்களில் பங்கு பெறாமல் இருக்கும் வகையில் அறிவுறுத்துவது கட்சிக்கு நன்மை எனவும் குறிப்பிட்டுள்ளனர், மேலும் திமுகவில் உள்ள சில எம் எல் ஏ கள் பெயரை குறிப்பிட்டு இந்து இயக்கங்கள் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாம், இதில் சுப வீரபாண்டியன் நிலைமை படு மோசமாக உள்ளதாம், ஒருமையில் சாதி குறித்து பேசி பழக்கப்பட்ட அவரால் அமைதியாக இருக்கமுடியவில்லையாம்.

இதனால் வேறு வழியின்றி இனி பழைய படி திருமாவளவனை முன்னிறுத்தி அரசியல் கருத்துக்களை பேசலாம் எனவும் இதனால் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மட்டும் வலம்வரலாம் என முடிவு எடுத்து ரூட்டை மாற்றி விட்டாராம், திமுக ஆதரவு தொலைக்காட்சியில் நேற்று அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வேறு ஒரு பேச்சு நிலவுகிறது இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

ஒரு வீட்டு சோறும் போச்சா அதுவும் பீகார் ப்ராமணரால் என சுபவீ பாணியில் சமூகவலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் அதிகம் வலம்வர தொடங்கியுள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3936 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*