பாண்டே வேண்டுதல் நிறைவேறியது, தடுத்தவர்களுக்கு ஏமாற்றம் !

சென்னை :- ரங்கராஜ் பாண்டே தனது கேள்விகள் மற்றும் விவாத நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ஊடகத்தில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

Loading...

அதன் பிறகு தனியாக சாணக்யா என்ற இணைய ஊடகம் மூலம், சமூகவலைத்தளத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார், மேலும் கடந்த ஆண்டு பாண்டே தனியார் ஊடகத்தில் இருந்து வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது, அதே நேரத்தில் தற்போதுவரை குறிப்பிட்ட கட்சியின் தலையீட்டினால் பாண்டே முக்கிய ஊடகத்தில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாண்டே கடந்த ஒரு வருடமாக இணைய ஊடகமான சாணக்யாவினை சாட்டலைட் சேனலாக மாற்ற பல்வேறு விதங்களில் ஆலோசனை முயற்சிகளை மேற்கொண்டு வந்தார், இடையில் வேந்தர் தொலைக்காட்சியின் பொறுப்புகளை ஏற்று கவனித்து வந்த சூழலில் அங்கும் சில தலையீடுகளின் காரணமாக வெளியேறினார், இவ்வாறு மிகவும் தனது துறையில் எதிர் நீச்சல் போட்டுவந்த பாண்டேவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு தனது முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.

Loading...

இன்னும் 3 மாதத்திற்குள் பாண்டே தலைமையிலான 24 மணி நேரம் ஊடகம் தமிழில் வரவிருக்கிறது, இதுதான் தற்போது யாரெல்லாம் பாண்டேவின் முயற்சிகளை எதிர்த்து வந்தார்களோ அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பாண்டே தனது தொலைக்காட்சி நிறுவனம் இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

பாண்டே இனி தனது தொலைக்காட்சியில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கி அதிரடியாக தனது பணியை தொடங்குவார் என்றும் மீண்டும் பழைய பாண்டேவினை சாட்டலைட் சேனலில் பார்க்கலாம் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3889 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*