Connect with us

#24 Exclusive

பாண்டேவின் அதிரடி முயற்சி வெற்றி பெறுமா? தடைகளை வென்ற நாயகனாக வளர்ச்சி அடைவாரா?

Published

on

சென்னை.,

தமிழகத்தை பொறுத்தவரை சினிமா, அரசியல் நட்சத்திரங்களை தாண்டி ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது கடினம்., அந்தவகையில் தனது நேரடியான கேள்விகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் ரங்கராஜ் பாண்டே.

பல எதிர்ப்புகளை சந்தித்து வளர்ந்தவர் என்பதால் தொடர்ந்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி தனது துறையில் சாதனைகளை படைத்துவளர்ந்தவர் பாண்டே., ஒரு கட்டத்தில் தனியார் தொலைக்காட்சியில் இருந்து தனது தலைமை செய்தியாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு விலகினார் பாண்டே.

தனியார் தொலைக்காட்சியில் இருந்து பாண்டே வெளியேறி இன்றுமுதல் ஏறத்தாழ ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சாணக்யா என்ற டிஜிட்டல் ஊடகம் மூலம் மக்களை சந்தித்து தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.., மேலும் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுடன் பேரம் பேசிய ரகசிய வீடீயோவை பிரத்தியேகமாக வெளியிட்டு ஊடகத்துறையில் தனக்குள்ள வட்டார முக்கியத்துவத்தை வெளி உலகிற்கு உணர்த்தினார் பாண்டே.

அதன் பிறகு முக்கிய பிரச்சனைகளின் போது மட்டுமே மக்களை சந்தித்து வரும் பாண்டே தனது சாணக்யா டிஜிட்டல் ஊடகம் மூலம் சிறப்பு நேர்காணல்களை நடத்தி தனது பணியை செய்து வருகிறார்.., மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிணை தனது சாணக்யா குழுவின் மூலம் நடத்தி வருகிறார் பாண்டே ! இவை பலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.

இருப்பினும் பாண்டே முன்பு இருந்தது போன்று மக்களிடம் நேரடி தொடர்பில் இல்லாதது போன்ற தோற்றம் பலருக்கும் ஏற்படுகிறது, குறிப்பாக முக்கிய பிரச்சனைகளின் போது பாண்டேவின் கருத்து பரவலாக மக்களை சென்றடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பாண்டே அதிரடியாக முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் அன்று தனது சாணக்யா தொலைக்காட்சியை மற்ற முன்னணி ஊடகங்களுக்கு இணையாக, அரசு கேபிள், DTH உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்.., இதற்காக பாண்டே கடந்த ஆண்டு முதல் பலமான திட்டமிடலுடன் வேலை செய்து வருகிறார்.

இதில் பலருக்கும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பாண்டே தனது சாணக்யா தொலைக்காட்சியை தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் [ ( தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா(தெலுங்கானா ), கர்நாடகா ] அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அதிரடியாக செய்தி தொலைக்காட்சியை தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது.

சில அரசியல் காரணங்களால் வெளியேறிய பாண்டே தற்போது அதிரடியாக ” தென் இந்திய மொழிகளில்” தனது நிறுவனத்தை தொடங்கி அதிரடியாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தனது முக்கியமான மற்றும் கடைசி முயற்சியை பாண்டே தொடங்கி இருக்கிறார், இந்நிலையில் பாண்டேய்வின் இந்த முயற்சி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தன்னை வீழ்த்தவேண்டும் என்று நினைத்தவர்கள் மத்தியில் என்றும் வீழ்த்த முடியாத சக்தியாக பாண்டே வளம் வருவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share