பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 10 ஓட்டு மட்டுமே பெற்று வெற்றிபெற்ற ராஜேஸ்வரிக்கு ஏற்பட்ட சோகம் !!

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 10 ஓட்டு மட்டுமே பெற்று வெற்றிபெற்ற  ராஜேஸ்வரிக்கு ஏற்பட்ட சோகம் !!

திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிச்சிவிளை கிராமம். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. வாக்காளர்களை பொறுத்தவரை மொத்தம் 785 நபர்கள் உள்ளனர், இந்த பிச்சிவிளை கிராமத்தை பொறுத்தவரை நாடார்கள் மட்டும் முழுமையாக சுமார் 770 மேற்பட்டவர்கள் உள்ளனர், காலம் காலமாக இந்த பகுதி பொது தொகுதியாக இருந்து வந்தது வழக்கம்.

ஆனால் இந்த முறை தொகுதி மறுவரை காரணமாக இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தனி தொகுதியாக தலித் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டது, வெறும் 6 நபர்கள் மட்டுமே இங்கு தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால் இது மறுவரை செய்யபட்டது தவறு என்றும், எதன் அடிப்படையில் பிச்சிவிளை பஞ்சாயத்து தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் விளக்கம் கேட்டனர்.

தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால், அடுத்த முறை மாற்றி கொள்ளலாம் என விளக்கம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது, ஆனால் அதனை கிராம மக்கள் ஏற்காமல் தேர்தலை புறக்கணித்தனர் இதனால் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 13 வாக்குகள் மட்டுமே இந்த பஞ்சாயத்து பகுதியில் பதிவானது,

Loading...

இதில் ராஜேஸ்வரி 10 வாக்குகள் பெற்றார், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுந்தராட்சி என்பவர் 3 வாக்குகள் மட்டுமே பெற்றார் அதில் ஒன்று செல்லாத வாக்கு என அறிவிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்த பஞ்சாயத்து பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு யாருமே போட்டியிடாத காரணத்தால் இந்த பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

அதே நேரம் மீண்டும் யாரும் வார்டு உறுப்பினருக்கு மனு தாக்கல் செய்யமுடியாத சூழலில் பஞ்சாயத்து தலைவர் செய்லபடுவது சந்தேகமே என்றும் வார்டு உறுப்பினராக போட்டி போட அங்கு பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களே இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது இதனால் ராஜேஸ்வரியால் செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *