Connect with us

#24 Exclusive

மாஃபியா முதல் லைகாவின் அனைத்து படங்களுக்கும் தடை: அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். இந்நிறுவனம் தான் அதிக பொருட் செலவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகின்றன.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ மற்றும் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ உள்பட பல திரைப்படங்களை இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் திரையுலகில் மட்டும் நிறுவனம் ரூபாய் 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்பது முக்கியமான விஷயம்

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரித்த ’மாபியா’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’மாபியா’ படம் உள்பட லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் தடை என கேரளாவில் உள்ள பாலக்காடு விநியோகஸ்தர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Loading...

பாலக்காடு பிலிம் டிஸ்ட்ரிபூஷன் அசோசியேஷன் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதால் லைக்கா நிறுவனங்களின் படங்கள் இனி கேரளாவில் ரிலீசாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending