Connect with us

#24 Exclusive

வானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.

Published

on

வானில் இந்திய பயணிகள் விமானத்தை தடுத்த பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி சம்பவம்.

காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதில் இருந்து, பாகிஸ்தான் இந்தியா மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அதன் வான்பரப்பை பயன்படுத்தக்கூடாது என இந்தியாவிற்கு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 23 -ம் தேதி, டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (பயணிகள் விமானம், பாகிஸ்தானின் வான்வழிக்கு மேலே சென்றபோது அந்நாட்டு விமானப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பு தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் பயணிகள் விமானத்தை எந்த நாடும் இடைமறித்து நிறுத்தாது, தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் பாகிஸ்தானின் வான்வழியில் இருந்து வேறு வழியாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்தபோது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தை எப்- 16 ரக போர் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானப்படை சுற்றி வளைத்திருக்கிறது, பயணிகள் விமானத்தைதான் தாங்கள் இயக்குவதாக சொல்லியும் விமானத்தை விடாமல் சுற்றி வளைத்தவர்கள் தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுபோல் பேசியுள்ளனர். இதனால் விமானத்தில் பயணம் செய்த விமானிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் ஆப்கான் வழியாக உள்நுழைந்து அதன் பிறகு காபூல் சென்றிருக்கிறார்கள்.

இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share