Connect with us

சர்ச்சைகள்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட அமுல்யா தந்தை வெளியிட்ட வீடியோ ! முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி ! கடும் குற்றசாட்டு

பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் போட்ட அமுல்யா என்ற பெண்ணின் தந்தை உடனடியாக தனது உறவினர்கள் உதவியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் முஸ்லிம்களுடன் சேர்ந்து போராட்டம் என்று கிளம்பியதே அவள் வழிதவறியதற்கு காரணம் என கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவைசி கட்சியின் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் அமுல்யா லியோனி என்ற பெண் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசி கொண்டிருந்தார், திடீர் என பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் என கோஷம் போட ஒட்டுமொத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தடுத்து அவரை வெளியேற்றினர், பின்பு காவல்துறை அவரை கைது செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை லியோனியை அவரது உறவினர்கள் உடன் சிலர் சென்று, கேட்டதில் அவர் கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

பாக்கிஸ்தான் கோஷம் போட்டது மிக பெரிய தவறு எனவும், முஸ்லிம்களுடன் சேர்ந்து போராட்டம் செல்லும்போதே கண்டித்ததாகவும் ஆனால் அவள் கேட்கவில்லை, இதன் பின்னணியில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் இருப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் தான் அவளை ஜாமினில் எடுக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

முஸ்லிம்களுடன் சேர்ந்ததே அவள் திசை மாறா காரணம் எனவும் அவளது பின்னணியில் தனக்கு அடையாளம் தெரியாத ஒருவன் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருப்பதால் முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அமுல்யாவின் சமூகவலைத்தள பதிவுகள் பெரும்பாலும் இந்தியாவிற்கு எதிராகவும், முஸ்லீம் நண்பர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கு கொள்வதுமாகவே இருந்துள்ளன.

அமுல்யாவின் பேச்சினை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அவரது பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்த படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending