Connect with us

சர்ச்சைகள்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட பெண்ணிற்கு தண்டனை கொடுக்கப்பட்டது, இனி கனவிலும் கோஷம் போடமாட்டார் !!

பெங்களூரில் AIMIM இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி கலந்துகொண்டார் , அமுல்யா என்ற பெண் மேடையில் பேசும் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார். அவரை தடுக்க ஓவைசி முயன்ற போதும் அப்பெண் கேட்கவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்தது. அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்,

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒவைசி அய்யோ.எங்கள் கருத்து இந்தியா வாழ்க என்பது தான் எனவும் பெண்ணின் செயலை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறினார், இதற்கிடையில் அமுல்யா மீது காவல்துறையினர் ஜாமினில் வெளிவராத பிரிவுகள் மற்றும் தேச துரோகம் வழக்கினை பதிவு செய்துள்ளனர், மேலும் அவர் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் கோசம்போட்ட போது கூட சேர்ந்து கத்திய நபர்களையும் வீடியோ பதிவுகள் மீது ஆராய்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிய இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Loading...

இந்நிலையில் அமுல்யா நான் இந்தியாவும் வாழ்க பாகிஸ்தானும் வாழ்க என்றுதானே கூறினேன், இந்தியா ஒழிக என சொல்லவில்லையே, என்னை விட்டு விடுங்கள் என கதறினாராம், இந்தியர்களின் பல உயிர்களை காவு வாங்கி அதன் மூலம் சந்தோசம் அடையும் மற்றோரு எதிரி நாட்டினை வாழ்க என கோஷம் போட்டால் தேசத்துரோக வழக்கு நிச்சயம் பதிவு செய்யப்படும் என காவல்துறை பதில் அளித்துள்ளது.

Loading...

ஒரு கட்டத்தில் தேசிய கீதம் பாடுவதோ, தேசிய கொடியை மதிப்பதோ எங்கள் மதம் கொள்கைக்கு எதிரானது என்று கூறிய இஸ்லாமியர்கள் பலர் இப்போது தேசிய கொடியுடன், தேசிய கீதம் பாடுவதும், இந்தியா வாழ்க என கோஷம் போடுவதும் CAA பவர்தான் எனவும் விரைவில், NCR வந்தால் தேசப்பற்றுள்ள இஸ்லாமியர்களை அடையாளம் காணலாம் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

©TNNEWS24
 

Loading...

Trending