முதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக?

லடாக்

Loading...

காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

இது இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இதனால் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Loading...

இந்த நிலையில் காஷ்மீர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த பின்புதான் இப்படி நடந்து இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

வலை விரித்த இந்தியா

இந்தியா, காஸ்மீரை கைப்பற்ற என்றைக்கோ நினைத்து விட்டது,, அதற்குரிய காய்களை 2014 ல் இருந்தே நகர்த்தி விட்டது,,

இதன் ஒரு பகுதியாக அனைத்து நாடுகளிடமும் நடப்புறவை வளர்த்தது,, மேலும் வல்லரசு நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவின் நட்பில் உள்ளன,,

மேலும் ஈரானை கைக்குள் எடுத்தது, இதனால் மற்ற வளைகுடா நாடுகளுடன் நடப்புறவில் பாதிப்பு வராத மாதிரி நடந்து கொண்டது..

இன்று பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகள் அனைத்துதும் இந்தியாவின் கைக்குள் இதில் இஸ்லாமிய நாடுகளும் அடக்கம், இத்தனை வலையும் விரித்த பிறகுதான் செயலில் இறங்கியது ,, ஆனால் நம் நாடு யாருடனும் நட்பில் இல்லை சீனாவை தவிற,,

எல்லாவற்றிக்கும் மேலாக ராணுவ பலத்தை பெருக்கியது,, சீனாவை பின் வாங்க செய்தது,, இரண்டு முறை பாகிஸ்தானுக்கும் புகுந்து தாக்குதல் நடத்தியது,, கடைசியாக புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தானை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது இந்தியா..

இன்றைய நிலையில் நமக்கு ஆதரவு கொடுத்தால் இந்தியாவை பகைக்க வேண்டி வருமோ என்று அனைத்து நாடுகளும் பயப்படுகின்றன

இவ்வளவு செய்த பிறகு தான் செயலில் இறங்கியது இந்தியா ..

காஸ்மீர் பிரச்சனையை மோடி இரண்டு வாரத்தில் எடுத்த முடிவு அல்ல,, அவர் மறுபடி ஆட்சி அமைந்தவுடனே தொடங்கி விட்டார் அனைத்து ராணுவம், தந்திரங்கள் தயார்படுத்தி வைத்து விட்டார்.. அதன் பிறகுதான் காஸ்மீர் பிரச்சனைக்கு ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தது இந்தியா எதுவும் கிடைக்கவில்லை, பின்னர் ராஜ தந்திரத்தை கையில் எடுத்தது இந்தியா அதற்கு கை கொடுத்தவர் டிரம்ப்.

காஸ்மீர் பற்றி டிரம்புடம் மோடி பேசவே இல்லை,, ஆனால் டிரம்பு பேசியதாக ஒரு நகர்வை நகர்த்தியது இந்தியா..

காஷ்மீர் குறித்து இரண்டு வாரம் முன் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார். நான் கண்டிப்பாக உதவ தயார், என்று டிரம்ப் பேசினார். அவரின் இந்த கருத்தை தவறு என்று இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது. இது வெறும் நாடகம் தான்,,

மோடி காஸ்மீர் விஷயம் குறித்து கண்டிப்பாக பேசி இருக்க மாட்டார்,, ஆனால் அவர் சொல்லாததை கண்டிப்பாக ட்ரம்ப் சொல்ல மாட்டார்,, அதையும் கடந்து ட்ரம்ப் சொல்லுகிறார் என்றால் இது நாடகம் இல்லாமல் வேறு என்ன,, இதை நம் ஆட்சியாளர்களுக்கு புரிய தெரியவில்லை

இந்நிலையில் இந்த சூழ்ச்சிக்குள் மாட்டி கொண்டது பாகிஸ்தான் இம்ரான் அமெரிக்காவின் இந்த விருப்பத்தை பாகிஸ்தான் ஏற்று கொண்டது என்றார் . காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டால் சரியாக இருக்கும். பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க அமெரிக்காவின் ஆதரவு தேவை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

இதன் பிறகுதான் மோடி அதிரடியை தொடங்கி விட்டார்,, காஸ்மீரை இணைத்தும் விட்டார்,, நமக்கு ஆதரவு குரல் கொடுக்க யாரும் இல்லை ,, அனைவரும் ஒதுங்கி விட்டனர்,, இனி காஷ்மீர் விவகாரத்தை விட்டுவிட்டு பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாருங்கள் அதையும் தூக்கிவிடப்போகிறார்கள் என்று இம்ரானுக்கு அறிவுரை விளக்கியுள்ளார்.

பாகிஸ்தான் டிரம்பிடம் காஷ்மீர் விஷயத்தில் உதவி கேட்டு இருக்க கூடாது. அப்படி கேட்டதன் மூலம் அவர் இந்தியாவின் வலையில் சிக்கி விட்டார். இந்தியா திட்டமிட்டு தான் இப்படி செய்து இருக்கிறது. இந்தியா திட்டமிட்டது கூட இம்ரானுக்கு தெரியவில்லை.

பாகிஸ்தானை இந்தியா, டிரம்ப் மூலம் மறைமுகமாக வீழ்த்தி உள்ளது.

ஆனால் இம்ரான் கான் பாகிஸ்தானில் தனது அரசியல் எதிரிகளை காலி செய்ய உழைத்துக் கொண்டு இருக்கிறார். இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டார்.

காஷ்மீரில் நடந்த இந்த பிரச்சனைக்கும் எதிராக நாளை சர்கோதாவில் நான் பேரணி செல்ல இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார், மர்யம் நவாஸ் ஷெரிப்.

அவரின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகளே இப்படி இந்தியாவின் நகர்வுகளை புகழும்போது இந்தியாவில் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே தற்போது தீவிரமாக காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து வருவது இந்திய இறையாண்மையின் மீது இந்த கட்சிகளுக்கு அக்கறை இல்லையா என்றும் பாஜக மற்றும் மோடியை எதிர்க்க 100 காரணங்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கலாம் ஆனால் இந்தியாவின் ஒற்றுமை விவகாரத்தில் இப்படி பாகிஸ்தானிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த திமுக வரலாற்றில் நீங்காத தவறை செய்து விட்டதாகவும் குற்றம்சுமத்துகின்றனர்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2685 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*