என் காலத்தில் எங்கள் எதிரி இந்தியா அல்ல! பாகிஸ்தான் கேப்டன் ஓபன் டாக்!

என் காலத்தில் எங்கள் எதிரி இந்தியா அல்ல! பாகிஸ்தான் கேப்டன் ஓபன் டாக்!

Loading...

பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் வெஸ்ட் இண்டீஸ் அணிதான் எங்களின் எதிரி என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர். பாகிஸ்தான் அணியின் நாயகனாக விளங்கிய அவர் தற்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Loading...

அந்த பரபரப்பு இப்போதும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து வருகிறது. அதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் பகையும் ஒரு காரணம். இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் தன்னுடைய காலத்தில் இந்தியா எங்களுக்கு எதிரியாக நாங்கள் கருதவில்லை என பாக் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ’ எங்கள் காலத்தில் இந்திய அணிக்காக பரிதாபப்படுவேன். அப்போது நாங்கள்தான் அடிக்கடி வெற்றி பெறுவோம். போட்டியின் போது ‘டாஸ்’ போடுவதற்கு இந்திய அணி கேப்டனுடன் செல்லும் போது, அவரது முகத்தை பார்ப்பேன். அப்படியே பயம் தெரியும். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் விளையாடிய நாட்களில் எங்கள் எதிரி இந்தியா அல்ல, விண்டீஸ் அணியைத் தான் போட்டியாக நினைப்போம்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*