Connect with us

உலகம்

சோலியை முடித்தது இந்தியா கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது பாகிஸ்தான் புரியலையா படிங்க

இந்தியாவின் பாகிஸ்தானின் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை நல்ல பலனை தந்துள்ளது… மேலும் சர்வதேச அளவில் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாக தற்போது பாகிஸ்தான் உருமாறியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்து வரும் பாகிஸ்தானை FATF அமைப்பிடம் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்திருந்தது அதனை கருத்தில் கொண்டு

Loading...

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்படுவதை தடுக்க பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இனி சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தானிற்கு நிதி உதவி கிடைக்காது.

Loading...

பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றம் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய – பசிபிக் குழுமம் (APG) நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை.

மிகவும் முக்கியமான 11 நிபந்தனைகளில் 10 நிபந்தனைகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.

1)பாகிஸ்தான் மத்திய வங்கியின் 10 பேர் கொண்ட குழு திருப்திகரமாக பதில் தரவில்லை..

2) பயங்கரவாதிகள் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்து வருகிறது

3) ஐநா சபை அறிவித்த சர்வதேச பயங்கரவாதி மசூத் அஸாருக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது

4) பயங்கரவாதத்தை தடுக்க உள்நாட்டு சட்டங்கள் போதுமானதாக இல்லை

5)பயங்கரவாதிகள் பண பரிவர்த்தனையை தடுக்க பாகிஸ்தானில் போதுமானதாக சட்டங்கள் இல்லை

6) பயங்கரவாதி மசூத் அஸார், ஹபீஸ் சயீத், மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை பாகிஸ்தான் மேற்கொள்ள வில்லை

7)லஷ்கர் இ தொய்பா, ஜமாத் – உத் – தாவா,
பாலா- ஜெய்ஷ் இ முகமது மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை

8) இன்ஷனியாத் பவுண்டேஷன், அமைப்பை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவே இல்லை

9) கடன் வாங்கியதில் பெரும் தொகையை பயங்கரவாதத்திற்க்கே செலவிட்டு வந்துள்ளது பாகிஸ்தான்

10) பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் சொல்வதை FATF மற்றும் உறுப்பு நாடுகள் ஏற்கத் தயாராக இல்லை என்று இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது மற்றும் அதற்குரிய ஆதாரங்களை தந்துள்ளது என்று FATF அதிகாரிகள் தெரிவித்தனர்..

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்குள் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால் நிரந்தரமாக கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று இன்று FATF அறிவித்துள்ளது.

தொடர்ந்து இதே நிலையில் பாகிஸ்தான் நீடித்து வந்தால்… IMF, உலக வங்கி மற்றும் ஆசியன் வளர்ச்சி வங்கிகள் நிதி விசயத்தில் பாகிஸ்தான் தரத்தை குறைத்து விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் கடன் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் ஸ்டாண்டர்ட் & புவர், மூடிஸ் மற்றும் பிட்ச் நிறுவனங்கள் மிகவும் குறைத்து விடும்.

பொருளாதார சீரழிவை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி அமைப்புகளிடம் நிதி உதவி கேட்டால் கிடைக்காது என்று சூழ்நிலை ஏற்பட்டுள்ளது… இதனை சுருக்கமாக சொல்வது என்றால் பயங்கரவாதிகளை கட்டு படுத்து அல்லது பிச்சை எடுக்கும் நிலைக்கு பாகிஸ்தானின் பொருளாதார நிலை சென்றுவிடும் என்று சர்வதேச நிதி கண்காணிப்பு குழு பாகிஸ்தானிற்கு சாவுமணி அடித்துள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending