Connect with us

#24 Exclusive

பாஜாகவில் இணைந்த மற்றொரு பிரபல வீராங்கனை இணைந்ததும் கொடுக்கப்பட்ட முக்கிய பொறுப்பு !

சுனில் தத்தோர் மற்றும் கவுதம் காம்பிர் ஆகியோர் வரிசையில் பிரபல பேட்மிட்டன் பெண் வீராங்கனை சாய்னா நெய்வால் பாஜகவில் இணைந்துள்ளார்,

டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் சூடுபிடித்து வரும் சூழலில் பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர், சாய்னா நெய்க்வால் மோடியின் பல திட்டங்களை ட்விட்டரில் பாராட்டி வந்தார், இந்நிலையில் டெல்லியில் பாஜக அலுவலகம் சென்று தன்னை முறைப்படி பாஜகவில் இணைத்து கொண்டதுடன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, நரேந்திர மோடி அவர்களின் உழைப்பும், நாட்டு மக்களுக்கு செய்யும் நன்மையும் பிடித்திருக்கிறது.

நானும் அதுபோல் சேவையாற்ற தேசிய சிந்தனை கொண்ட பாஜகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார், சாய்னா குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவரை ட்விட்டரில் இடதுசாரிகள் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தேசியமே முக்கியம் என சாய்னா முடிவெடுத்து பாஜகவில் இணைந்து விட்டார்.

Loading...

சாய்னா பேட்மிட்டன் போட்டியில் 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில், வெண்கலம் வென்றார். அவர் 2009 இல் உலக நம்பர் 2 ஆகவும், 2015 இல் முதலிடத்திலும் இருந்தார் வருகிற பிப்ரவரி 8 டெல்லி தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாய்னாவிற்கு விளையாட்டு துறையில் கடந்த 6 ஆண்டுகளில் பாஜக அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து மக்களிடையே எடுத்து செல்லும் முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending