Connect with us

#24 Exclusive

இப்படி ஒரு பாயாசம் நீங்க கண்டிப்பா செய்து இருக்கமாட்டீர்கள்!!!!

முதலில் பாயாசத்திற்கு தேவையான பொருள்கள் :

அரிசி ஒருகப், தேங்காய் ஒன்று, ஏலக்காய் 2, வெல்லம் 1/4கிலோ, பால், முந்திரி, உலர்திராட்சை

முதலில் அரிசியை அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும். பிறகு தேங்காயை துருவி எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

Loading...

இப்போது அரிசியையும், தேங்காயையும், நன்கு அரைக்கவேண்டும். அடுப்பில் மூன்று டம்ளர் நீர் ஊற்றி அதில் கொதிக்கும் பொழுது அரைத்த மாவை ஊற்றவேண்டும். இதை நன்கு கலக்கவேண்டும். பிறகு கரைத்த வெல்லத்தண்ணியை வடிகட்டி அந்த மாவுடன் ஊற்றவேண்டும். பிறகு அது நல்ல கொதிக்கும் பொழுது ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றவேண்டும். பிறகு இரண்டு நிமிடம் வைத்து இறக்கவேண்டும். பாயசம் தண்ணியாகவே இருக்கலாம். இது போக போக கெட்டியாகும்.

Loading...

இப்போது ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சையை போட்டு வறுத்து பாயசத்தில் போடவேண்டும். இது மிகவும் ருசியாக இருக்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending