பா ரஞ்சித்தை கிண்டலடித்து விசிக வன்னியரசு எழுதிய அசுரன் பட திரை விமர்சனம் !

பா ரஞ்சித்தை கிண்டலடித்து விசிக வன்னியரசு எழுதிய அசுரன் பட திரை விமர்சனம் !

Loading...

இன்று உலகம் முழுவதும் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது, இத்திரைப்படம் குறித்தும் அசுரன் திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது பின்வருமாறு :-

Loading...

“காடு வச்சிருந்தா
பறிச்சுக்குவான்
காசு வச்சிருந்தா
பறிச்சுக்குவான்
ஆனா படிப்ப மட்டும்
பறிக்க முடியாது.
அதனால
படிக்கனும்.
படிச்சு நீ அதிகாரத்துக்கு
வரனும்”
– அசுரன் படத்தில்
தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுரை

ஒரே சாவி அதிகாரம் தான்.
நாம் அதிகாரத்தை
கைப்பற்ற வேண்டும்”
என்னும் புரட்சியாளர் அம்பேத்கரின்
கோட்பாட்டை
‘அசுரன்’
திரைப்படத்தில் இறுதியாக வைத்திருக்கிறார் இயக்குநர்
வெற்றி மாறன்.

சாதிய- வர்க்க அடக்குமுறைகளுக்கு
எதிராக இவ்வளவு துணிச்சலாக
இதுவரை தலித்துகளின் பக்கம் நின்று
யாரும் படம் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார்்இயக்குனர்.

பஞ்சமி நிலங்கள் குறித்து துணிச்சலாக
பேசியிருக்கிறான் அசுரன்.
“திருப்பி அடிச்சா தான் நம்ம வலிமை அவனுகளுக்கு புரியும்” என்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக
அசுரன் வேட்டையாடியிருக்கிறான்.

“செருப்பு போட்டு ஊர்த்தெருவுக்கு போனா தலையில் தூக்க வச்சு அடிப்பானுங்களோ….”
அந்த ஆதிக்கத்துக்கு எதிராக
பிள்ளைங்களை செருப்பு போட வச்சு
ஊர்த்தெருவுக்கு போகும் அந்த ஒரு காட்சி போதும்.
ஆதிக்க சாதியினரை அதே செருப்பால் அடிக்கும் அந்த ஒற்றை காட்சி
தலித்துகளின் கோப மொழியை
பிரதிபலித்திருக்கிறது.

“மானத்துக்காகத்தான் கொல பண்றோம்னு ஒத்துக்க மாட்டானுங்களே,
நகையை பறிக்கப்போனோம்.
பொம்பளய இழுக்கப்போனோம்னு தான்
கேஸ் போடுவானுங்க”
தலித்துகளின் வாழ்நிலையை
அறநிலையை மிக அழகாக
திரைப்படமாக எடுத்திருக்கும்
இயக்குனர் வெற்றி மாறனுக்கு
வாழ்த்துகள்…
( குறிப்பு:இவர் ஜெய்பீம்னு சொல்லாமலே
தலித்துகளின் வலியை கோபத்தை
திரைப்படமாக எடுத்திருக்கிறர்)

இவ்வாறு வாழ்த்திய வன்னியரசு கடைசியாக இயக்குனர் பா ரஞ்சித் அடிக்கடி சொல்லும் ஜெயபீம் வாக்கியத்தை சொல்லி மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் தலைமையை ஏற்று அவர் பின்னால் செல்வதால் ஆரம்பம் முதல் ரஞ்சித்தை விடுதலை சிறுத்தைகள் மறைமுகமாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*