அரசுக்கு 10 அறிவுரைகள் – முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அறிவிப்பு !

அரசுக்கு 10 அறிவுரைகள் – முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அறிவிப்பு !

Loading...

21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிக்க பத்து அறிவுரைகளை வழங்கியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்.

ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்;-

Loading...

1. விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரண்டு மடங்காக்கி  12 ரூபாயாக உடனடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்தவேண்டும்.

2. குத்தகை விவசாயிகளையும் பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். அவர்களைப் பற்றி விவரங்களைப் பெற்று உதவித் தொகையாக ரூ.6,000 என்று இரண்டு தவணையாக வழங்கவேண்டும்.


3.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளர்களுக்கு உடனடியாக 3,000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்.

4.நகர்புறங்களில் வாழும் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கிலும் 6,000 ரூபாயை உடனடியாக செலுத்தவேண்டும். ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5.குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை முற்றிலும் இலவசமாக வழங்கவேண்டும்.

6.பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும், தற்போதைய பணியாட்களுக்கு ஊதியத்தை வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொள்ளவேண்டும். ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கப்படும் பணம்  30 நாள்களில் திரும்ப அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்கவேண்டும்.

7.மேற்கண்ட பிரிவுகளில் பயன் பெறாதவர்களை அடையாளம் காண்பதற்கு எல்லா வார்டுகளிலும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்றால் அவர்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்கைத் தொடங்கி அவர்களுக்கு 3,000 ரூபாய் வழங்கவேண்டும்.

8.அனைத்து வரிகளையும் செலுத்துவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கவேண்டும்.

9.மாதத்தவணையை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

10.எல்லா அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*