Connect with us

Uncategorized

பி.வி.சிந்துவின் வாழ்க்கை படமாகிறது….சிந்து கதாப்பாத்திரத்தில் இவர் தான் நடிக்க உள்ளார்.

Published

on

இந்தியாவில் பேட்மிட்டன் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது பி.வி.சிந்துதான். ஏனென்றால் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார். அதன்பிறகு தற்போது சுவிட்சர்லாந்தில் நடை பெற்ற உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதனால் பி.வி.சிந்து பேட்மிட்டன் உலகில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதனால் தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இவரது வாழ்க்கையை படமாக தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஒஸ்தி, அருந்ததி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்க உள்ளார். பி.வி.சிந்துவின் பயிர்ச்சியாளரான முன்னால் பேட்மிட்டன் வீரரான கோபிசந்த் கதாப்பாத்திரத்தில் சோனு சூட் நடிக்க உள்ளார். சிந்துவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். அவர் இப்படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கதையை முன்னதாகவே தயாரித்து விட்டனர். ஆனால் தற்போது சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றதும், க்லைமாக்ஸ் கதையை மாற்றி அமைக்க இருக்கிறார்கள். இது குறித்து சோனு சூட் கூறுகையில். சிந்துவின் வாழ்க்கை கதையை ஏற்கனவே எழுதி முடித்து விட்டோம், இப்போது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை சிந்து வென்றிருப்பதால் ஏற்கனவே இருந்த கிலைமாக்ஸை மாற்றி புதிதாக ஒரு கிலைமாக்ஸை வைக்க இருக்கிறோம். இந்த கதையை உருவாக்குவது சவாலானதாக இருக்கும் என்று கூறினார்.

Loading...
Loading...

Trending