Connect with us

#24 Exclusive

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு நிலை என்ன?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் மீது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குறித்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தன

இந்த நிலையில் ப சிதம்பரம் அவர்கள் மீது சிபிஐ தாக்கல் செய்திருந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனாலும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் இன்னும் சிறையில் உள்ளார்.

Loading...

இந்த நிலையில் ப.சிதம்பரம் அவர்களின் உடல்நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு மூன்று நாட்கள் இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது

Loading...

ப.சிதம்பரம் அவர்களுக்கு உடல்நிலையில் பிரச்சினை இருந்தால் எய்ம்ஸ் மருத்துவருடன் இணைந்து குடும்ப மருத்துவரும் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ப. சிதம்பரம் இன்னும் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending