Connect with us

சினிமா

சோபிக்காத அண்ணாத்த ! – குறைகிறதா ரஜினியின் மாஸ் ?

நேற்று வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் போஸ்டர் யூடியூப் இணையதளத்தில் மிகக்குறைவான பார்வையாளர்களையே கவர்ந்துள்ளது.

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் முதல் முறையாக ரஜினியுடன் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படாத நிலையில் தலைவர் 168 என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தலைப்பும் மோஷன் போஸ்டர் வெளியானது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு அண்ணாத்த என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் ரஜினியின் புகைப்படம் எடுக்கும் மோஷன் போஸ்டர் வெளியானது.

Loading...

ஆனால் இந்த போஸ்டருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. யூட்யூபில் கூட மிகக் குறைந்த அளவிலான பார்வையாளர்களே இந்த மோஷன் போஸ்டரை பார்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி படத்தின் போது கிடைக்கும் உற்சாக வரவேற்பு குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Loading...
Loading...

Trending