Connect with us

#24 Exclusive

ஆஸ்கர் விருதுகள் 2020 ! விருதுகளை அள்ளிய 1917 , ஜோக்கர் ரசிகர்கள் கவலை யார் யாருக்கு என்ன என்ன விருதுகள் முழு பட்டியல் .

திரை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுவது வழக்கம் . இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா இன்று காலை இந்திய நேரப்படி 6:30 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியது இந்த ஆண்டு மிக பெரிய எதிர்பார்ப்புடன் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட ஜோக்கர் திரைப்படம் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது

சிறந்த இசையமைப்புக்கான பட்டியலில் ஸ்டார் வார்ஸ் , 1917 , ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் இடையே கடும் போட்டி இருந்தாலும் இறுதியில் ஜோக்கர் திரைப்படம் விருதை தட்டிச்சென்றது . அதேபோல சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தின் கதாநாயகன் ஜொங்க்கின் பீனிக்கிஸ் பெற்றுள்ளார் .

அதேபோல கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்1917 திரைப்படம் சிறந்த காட்சியமைப்பு சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த ஒலிக்கலவை உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது . தென் கொரிய திரைப்படமாக வெளியான பாராஸைட் என்ற திரைப்படம் சிறந்த இயக்குனர் , சிறந்த வேற்று மொழி படம் , சிறந்த ஸ்கிரீன் பிலே உள்ளிட்ட 3 விருதுகளை வென்றுள்ளது

Loading...

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டாய் ஸ்டோரி 4 வென்றுள்ளது . சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த சவுண்ட் எடிட்டிங் ஆகிய 2 விருதுகளை போர்ட் Vs பெர்ராரி திரைப்படம் வென்றுள்ளது சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி திரைப்படத்திற்காக ரேநீ ஸில்லவெர்ஜ் வென்றுள்ளார் .

Loading...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கர் திரைப்படம் இரண்டு விருதுகளை மட்டுமே வென்றுள்ளது ஜோக்கர் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது ஜோக்கர் திரைப்படம் குறைந்தது 5-7 விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending