Connect with us

#24 Exclusive

அமெரிக்கா செல்லும் OPS காத்திருக்கும் சர்வதேச வளரும் நட்சத்திரம் !

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான O.பன்னீர்செல்வம் பத்துநாள் அரசுமுறைப் பயணமாக வரும் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறார்.

இதுதொடர்பாக துணைமுதல்வர் அலுவலகத்தில் இருந்து இன்று வெளியிட பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நவ.8 முதல் நவ.17 வரை அரசு முறைப் பயணமாக துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்க செல்ல உள்ளார்.


நவ.8 காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்
நவ.9 முதல் நவ.12 வரை – சிகாகோ; நவ.13, 14 – வாஷிங்டன்; நவ.14, 15 – ஹூஸ்டன்; நவ.16 நியூயார்க்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் நவ.17 துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புகிறார்
சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்யும் துணை முதல்வருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் பயணம் செய்கிறார்.

Loading...

இந்த பயணத்தின் போது ஓபிஎஸ்ஸுக்கு ‘American Multi Ethnic Coalition Inc’., என்ற அமைப்பின் சார்பாக இவ்வாண்டு சர்வதேச வளரும் நட்சதிரம் – ஆசியா விருது வழங்கப்பட உள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Trending