ஒபிஎஸ்ஸா இது? என்ன நடக்கிறது அதிமுகவில் ஒரே வாரத்தில் அதிரடி மாற்றம் !!!

அதிமுகவில் நடைபெறும் அதிரடி மாற்றங்கள் அதிமுகவினரை மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் என்ன நடக்கிறது என விவாதம் நடத்தும் அளவிற்கு தற்போது மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன.

Loading...

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிவந்துள்ளன, அதிலும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றத்தில் இருந்து, அதற்கு பின்னர் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுகவினர் இணைந்ததில் இருந்து அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக எடப்பாடி பழனிசாமி மட்டுமே முன்னிறுத்தப்பட்டு வந்தார்.

பல இடங்களில் கே பி முனுசாமி நேரடியாக கட்சியின் மூத்த அமைச்சர்களிடமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறி இருந்தார், மேலும் பல இடங்களில் கட்சி பேனர்களில் ஓ பி எஸ் படம் பாரபட்சமாக இடம்பெற்றது.

Loading...

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் ஓபிஎஸ்சிடம் கூறிய போதும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை மாறாக கட்சியை வழிநடத்தும் பொறுப்பை கவனித்து வந்தார், ஆனால் அதிமுக கூட்டணி சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றிபெற்ற சூழலில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது எடப்பாடி பழனிசாமியால் தடைப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இது கட்சிக்குள் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒபிஎஸ் மற்றும் EPS ஆகியோருக்கு இடையே விரிசலை உண்டாக்கியது, இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் தற்போது அதிகாரத்தை கைப்பற்றும் விதமாக ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள்.

ஜெயலலிதாவால் அதிமுகவின் மிக பெரிய அமைப்பு தகவல் தொழில்நுட்ப அணிதான் என கூறப்பட்ட IT WING தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிறுத்துவதாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதிரடியாக அதனை மாற்ற முடிவெடுத்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அதனை 4 மாவட்டங்களாக பிரித்து 4 மாவட்டங்களுக்கும் தனி தனி மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார்.

மேலும் அதன் பிறகு ஊரக உள்ளாட்சி அமைப்பை முழுவதும் கலைத்து உத்தரவிட்டதும் அதே பாணியில்தான் எனவும், விரைவில் அதற்கு பொதுவான நபர்களை நியமனம் செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது, ஓ பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் கட்சி ஓபிஎஸ் தலைமையிலான அணியிடம் இருப்பதே என்றும் அதிமுக தலைவர் மதுசூதனன் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் தீர்ப்பில் குறிப்பிட்டதும் காரணம் என கூறப்படுகிறது.

இதைவிட பெங்களூரில் உள்ள தனியார் அமைப்பிடம் சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுக்கும் முடிவை கொடுக்கும் படி வலியுறுத்தியது பன்னீர் செல்வம்தான் எனவும் கட்சியின் பொருளாளர் என்ற முறையில் அவரிடமே நிதி அதிகாரம் இருப்பதால் வருகின்ற தேர்தலில் ஓபிஎஸ்ஸை எதிர்பார்த்தே அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்தடுத்து கட்சியில் மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கும் சூழலில் அதிமுகவில் மாவட்ட.செயலாளர்கள் மாற்றத்திற்கும் அதிமுக தலைமை முன்வந்துள்ளதாம், இதனால் என்ன செய்வது என தெரியாமல் இதற்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த மூத்த அமைச்சர்கள் இப்போது பன்னீர் செல்வம் பக்கம் சாய ஆரம்பித்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பன்னீர் செல்வத்தின் பின்னணியில் பாஜக இருக்கிறதா அல்லது அவர் வேறு ஏதும் வியூகம் வைத்துள்ளாரா என இப்போது தீவிரமாக யோசித்து வருகிறார்களாம், சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார் என கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேலும் அதிர்ச்சியில் இருக்கிறதாம், யார் இது ஓபிஎஸ்ஷா இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருப்பது என அதிமுகவினரே ஆச்சர்யத்தில் உள்ளனராம்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*