மோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR ! தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி

மோடி வழியில் அசத்தல் திட்டத்தை தொடங்கிய OPR ! தொகுதி மக்கள் ஹாப்பி அண்ணாச்சி

Loading...

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தும், குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஓ.பி.ஆர் உங்களுடன் நான் என்ற அலைபேசி செயலியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியின் மூலம் தேனி நாடாளுமன்ற தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைக்கலாம். இக்கோரிக்கை மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சட்ட சிக்கலான பிரச்னைகளை தீர்க்க இந்த செயலியிலேயே சட்ட வல்லுனர்கள் குழு ஒன்றும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Loading...

இதனைத் தொடர்ந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் தேர்தல் நேரத்தில் தொகுதி மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அவற்றை நிறைவேற்றும் வகையில் அலுவலகம் திறந்தது மட்டுமல்லாது மக்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களுக்கும் எனக்கும் உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக உங்களுடன் நான் என்ற புதிய செயலியை துணை முதல்வர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இங்கு திறந்துள்ள அலுவலகம் தலைமை அலுவலகமாகும். இனி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு அலுவலகம் திறக்கப்படும்.
இவ்வாறு தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கூறினார்.

இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குஜராத் முதலமைச்சராக பதவியில் இருந்த போது மோடி இதுபோன்ற டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை அதிகம் கவர்ந்து வந்தார், மேலும் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வினையும் கண்டு வந்தனர் அதனை பின்பற்றி தற்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் டிஜிட்டல் முறையில் மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதுபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் திட்டத்தை தொடங்கி மக்கள் குறைகளை கேட்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*