Connect with us

#24 Exclusive

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏ களை தகுதி நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏ களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கை அதிரடியாக முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனால் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோரும் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

Loading...

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும்போது, அது தொடர்பான கேள்விக்குள் நீதிமன்றம் ஏன் செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் சபாநாயகரின் உத்தரவில் தலையிட வாய்ப்பில்லை என கூறி வழக்கினை முடித்து வைத்துள்ளது.

Loading...

எனவே இனி 11 MLA கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Trending